விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்… குவியும் வாழ்த்துக்கள்..!!


பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் போல்ட் ஆவார். டேனி மோரிசன் (இந்தியாவுக்கு எதிராக, 1994-ம் ஆண்டு), ஷேன் பான்ட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007) ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்து அணியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!