துருக்கியில் விசித்திரமான பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகம்… சொல்லித் தருவது என்ன தெரியுமா?


எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளவும், ஏலியன்களிடம் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது.

இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத்தரப்படுமாம்.

மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கும் இது உதவுமாம். இன்னும் 10-ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனராம். இந்த படிப்பை குறித்த தேடலின் மூலம் இது தற்போது வைரலாகி வருகிறது.

Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!