நேரலை வீடியோ தற்கொலைகளை தடுக்க ‘ஸ்பைடர்’ பட பாணியில் பேஸ்புக் திட்டம்…!


தற்கொலைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்ந்த டூல்களை பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்து அதற்கான அம்சங்களை வழங்கி வருகிறது. ஸ்பைடர் பட பாணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் லைவ் அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவரை பேஸ்புக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவு அல்லது லைவ் வீடியோ (நேரலை வீடியோ) உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும் போது பேடெர்ன் அங்கீகாரம் (pattern recognition) எனும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும். இந்த அம்சம் ஐரோப்பிய யூனியன் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது.

பேஸ்புக் சேவையை பாதுகாப்பான சமூகமாக உருவாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக பேஸ்புக் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களில் யாரேனும் மன சோர்வில் இருக்கும் போது அவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்து வருகிறது என பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக்கின் புரோஆக்டிவ் டிடெக்ஷன் அம்சத்தின் அங்கமாக உடனடி பதில் அளித்தவர்களுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றியுள்ளது. அதன்படி பேஸ்புக் பதவுகளில் உதவி கோரும், அல்லது பிரச்சனைகளை குறிக்கும் சில வார்த்தைகளை கொண்டவை கண்டறியப்படுகிறது.

இந்த அம்சத்தின் கீழ் சில இடங்களில் யாரும் அறியாத சில வீடியோக்களையும் தொழில்நுட்ப உதவியுடன் பேஸ்புக் கண்டறிந்துள்ளது என ரோசென் செரிவித்துள்ளார். தற்கொலை தடுப்பு மற்றும் சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் அனுபவம் மிக்க குழுவினர் பேஸ்புக்கில் பணியாற்றி வருகின்றனர்.

செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் சவால்கள், சுய தீங்கு மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள், ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை இந்தியாவில் இயங்கி வரும் தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிப்பதாக தெரிவித்தது.

உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10-ம் தேதி துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தற்கொலை தடுப்பு மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் குழுவினர் சார்ந்த டூல்களை இந்திய பயனர்களின் நியூஸ் ஃபிடில் பேஸ்புக் வழங்க துவங்கியது.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!