மைத்திரியை கொல்ல இலங்கையில் 4 ரா உளவாளிகள்… பின்ணனியில் பகீர் தகவல்கள்…!


இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த கேள்வி புதிது கிடையாது.

இதற்கு முன்பே இரண்டு இலங்கை அதிபர்களை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக குற்றச்சாட்டுகள் வந்தது. இந்த நிலையில் இந்த கொலை திட்டத்தை ரா எப்படி எல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்தது என்று சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


ஆனால் கடைசியில் இலங்கை அரசு இந்த தகவலை மறுத்தது. இந்தியா அப்படி எதுவும் திட்டமிடுவதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியது. பிரதமர் அலுவலகம் இந்த மறுப்பு கடிதத்தை வெளியிட்டது. ஆனாலும் அதன்பின் வரிசையாக இந்த ரா அமைப்பின் கொலை திட்டம் குறித்த தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்தான் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் ரா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேர்தான் இந்தியாவிற்கு மைத்ரிபால சிறிசேனா பற்றிய தகவல்களை அனுப்புவது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கூறியதே மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் அமரவீராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அமரவீரா, மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையில் நான்கு ரா உளவாளிகள் உள்ளனர். அவர்கள் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் ராஜபக்சேவின் மகன் நமல், ”அந்த நான்கு பேரின் விவரங்களை வெளியிடுங்கள், இல்லை பதவி விலகுங்கள்” என்று கூறியுள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!