கூகுள் ஜீபோர்டின் புதிய அப்டேட்… இதில் என்ன சிறப்பு தெரியுமா.?


கூகுள் நிறுவனத்தின் ஜீ போர்டு எனும் கீபோர்டில் ஃப்லோட்டிங் கீபோர்டு அம்சம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீ போர்டு (G-Board), ஆன்டிராய்டு போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் விசைபலகையாக உள்ளது.

இதற்கான புது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அப்படி ஒர் அப்டேட்டை சில ஆன்டிராய்டு போன்களுக்கு மட்டும் தற்போது கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது.

ஜீ போர்டின் புதிய வர்ஷனான 7.6 -ல் ஃலோட்டிங் கீபோர்ட் (Floating keyboard) என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது.
ஃலோட்டிங் கீபோர்டு என்றால், அந்த கீபோர்டை திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.

மேலும், இதன் அளவையும் எவ்வளவு வேண்டுமோ சுருக்கிக் கெள்ளலாம்.

ஜீ போர்டில் இருக்கும், ‘ ஜீ ‘ என்ற கூகுளின் குறியீட்டை அழுத்தினால் மூன்று புள்ளிகள் தோன்றும். அதை அழுத்தினால் அங்கு இந்த ஃப்லோட்டிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதுமிட்டுமின்றி கூகுள் விசைப்பலகை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் கண்ணாடி போல் மாறி பின்னால் இருக்கும் செயலி தெரியும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.-
Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!