சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவின் 50 நகரங்களில் முதலிடம்…!


சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவின் 50 நகரங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்திய நகரங்களின் மாதாந்திர ஸ்மார்ட்போன் விற்பனை சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் முந்தைய காலாண்டை விட ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவின் 50 நகரங்களில் 50 சதவிகிதமாக உள்ளது.

முந்தைய காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 27 சதவிகிதமாக இருந்தது. இந்தியான் முதல்தர நகரங்கள் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அதன்படி 2017 மூன்றாவது காலாண்டில் மட்டும் 29 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்தியாவின் இரண்டாம் தர நகரங்களான போபால், குருகிராம் மற்றும் ஜெய்பூர் உள்ளிட்டவை வேகமான ஸ்மார்ட்போன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.


இந்த நகரங்களில் முந்தைய காலாண்டை விட 40 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்கள் இந்தியாவின் 50 நகர ஸ்மார்ட்போன் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு விற்பனையை பதிவு செய்துள்ளன.

4ஜி சேவை பயன்பாடு மற்றும் புதிய வியாபார யுக்தி மற்றும் விற்பனை காரணமாக இந்தியாவின் முதல் தரம் மற்றும் இரண்டாம் தர நகங்களில் பல்வேறு பிரான்டுகளும் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

இ-காமர்ஸ் வலைத்தளங்களும் இந்தியாவில் மிதமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் 50 நகரங்களில் சியோமி நிறுவனம் 26.5 சதவிகித பங்குகளுடன் முதலிடத்திலும், சாம்சங் 24.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.

2017-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சியோமி நிறுவனம் 120 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 40 சதவிகித பங்குகளை பெற்று இந்தியாவின் 50 நகரங்களில் அதிகம் விற்பனையாகியுள்ள ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2, ஜெ7 மேக்ஸ், ஜெ7 பிரைம் மற்றும் ஜெ7 நெக்ஸ்ட் உள்ளிட்ட மாடல்களை ஒன்று சேர்த்து 15 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சியோமி, சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து லெனோவோ, ஒப்போ மற்றும் விவோ அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!