மூன்று இன்னிங்சில் 50க்கு மேல் ரன்கள் – டோனிக்கு அடுத்த இடத்தில் யார் தெரியுமா..?


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ரகானே உடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்த் 85 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

ரிஷப் பந்த் இங்கிலாலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்திருந்தார். அதன்பின் ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 92 ரன்னில் விளாசியிருந்தார். தற்போது 85 ரன்கள் அடித்துள்ளார்.

இதனால் தொடர்ச்சியாக மூன்று இன்னி்ங்சில் 50 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மகேந்திர சிங் டோனி 2008 மற்றும் 2009-ல் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார்.source-maaliamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!