நடிகை அமலா பால் தனியா வந்ததால் தலை தெறிக்க ஓடிய டைரக்டர்…!


METOO’வில் பெயரை இணைத்துவிடுவேனோ என்று பயந்து ‘ராட்சசன்’ பட இயக்குநர் தன்னை சந்திக்காமல் பயந்து ஓடிவிட்டதாக நடிகை அமலா பால் தெரிவித்தார்.இரு வாரங்களுக்கு முன் வெளியான ‘ராட்சசன்’ படத்தை ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தார். எதிர்பாராமல் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் நன்றி அறிவிப்புக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பேசிய நடிகை அமலா பால். ‘மி டு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே துணிச்சலாக எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியவள் நான். அதனால் எனக்கு சில பட வாய்ப்புகள் நழுவிப் போன நிலையில் இப்படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால்தான் இயக்குநர் ராம்குமாரிடம் பேசி ‘ராட்சசன்’ பட வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார்.


இயக்குநர் ராம்குமார் இன்னும் பேச்சிலர்தான் என்பது இங்கே பலருக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு நல்ல பேச்சிலர். இப்படத்தில் வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒருமுறை அவரை தனியே சந்திக்கப் போயிருந்தேன். ஆனால் என்னைக் கண்டதும் பயந்து ஓடிவிட்டார்.

நடிகைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து காக்கும் மி டூ’ மூவ்மெண்ட் நல்ல சமாச்சாரம்தான். செக்ஸ் தொல்லை என்பது மூடிமறைக்கக் கூடிய விஷயம் அல்ல. தவறான நோக்கத்துடன் அணுகுபவர்கள் இனி நம்மைக்கண்டு அஞ்சி நடுங்கவேண்டும்’ என்றார். ஒரு டைரக்டருக்கு நன்றி தெரிவிக்க தனியா போறதை தவிர்த்தாலே பாலியல் தொல்லை பாதியா குறைஞ்சிடும். செய்வீங்களா அமலா கேர்ள்?-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!