ஆப்பிளின் புதிய தகவல்… மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்…!


ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனம் சமர்பித்துள்ள விண்ணப்பத்தில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேடென்ட்லி ஆப்பிள் எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி மடிக்கக்கூடிய பகுதி சாதனத்தை மடிக்க வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மடிக்கக்கூடிய பகுதி டிஸ்ப்ளே என்றும், மடிக்கப்பட்ட நிலையில் இது பார்க்க புத்தம் போன்று காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவானது மைக்ரோ-எல்இடி என்றும் இத்துடன் டிஸ்ப்ளேவை உருவகப்படுத்த லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட இருப்பதாக காப்புரிமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொருள் 14-1 அடுக்குகளை உருவாக்கி, அது மெமரி அலாய் அல்லது நிறைய மெட்டல் கிளாஸ் ஆக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி எல்ஜி நிறுவனத்தின் குறிப்பிட்ட டிஸ்ப்ளே பிரிவானது மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

எல்ஜி நிறுவனத்தின் தங்கை நிறுவனமான எல்ஜி இன்னோடெக் தனது குழுவினர்களை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான ரிஜிட் ஃபிளெக்சிபிள் பிரின்டெட் சர்கியூட் போர்டுகளின் [Rigid Flexible Printed Circuit Boards (RFPCB)]தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளது.


ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் அம்பலாவதால் சாம்சங் நிறவனத்திற்கு மாற்றாக எல்ஜியிடம் இருந்து OLED டிஸ்ப்ளேக்களை பெற இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய காப்புரிமை தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வருவது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

முந்தைய தகவல்களின் தொடர்ச்சியாக புதிய காப்புரிமை சார்ந்த தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வருவது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!