இலங்கைக்கு மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!! பரபரப்பு தகவல்..!!


இலங்கையில் நிகழும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் நாடு கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாறுபட்ட மழைக் காலநிலையும் இந்த அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக உலக வங்கி மேற்கண்ட எச்சரிக்கையினை விடுத்துள்ளது.மேற்கண்ட காரணங்களால் நாட்டில் உள்நாட்டு உற்பத்தியும் மக்களின் வாழ்க்கைத்தரமும் மிக மோசமான நிலைமைக்கு மாற்றமடையக் கூடும் என உலகவங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்றபோது பொருட்களின் விலைவாசிகள் உயர்மட்டத்தினையடைந்து வறுமை தலைவிரித்தாடலாம் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதேவேளை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.source-newlanka

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.