அம்மன் கோவிலுக்குள் திடீரென தோன்றிய 5 கால்கள் உடைய மாடு..!! திரளும் மக்கள் கூட்டம்..!!


பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் – பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!