விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வராலாற்று சாதனை…!


ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு, பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஹயபுஸா 2 ( Hayabusa 2) என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.

இந்நிலையில், ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.

இதன் விண்கல் மீது மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.

விண்கல்லில் தரையிரங்கிய ரோவர்கள், அங்கு எடுத்த புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜாக்ஸா குறிப்பிட்டுள்ளதாவது, ‘ இந்த விண்கல்லானது, சுமார் 1 கி.மீட்டர் அகலத்தில், தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் நிறைந்துள்ளது. வைர வடிவத்தில் காட்சியளிக்கிறது. மேலும், இந்த உலகத்தின் உருவாக்கம் மற்றும் இயக்கம் குறித்து, இந்த விண்கல் மூலம் தெரியவரும்’ என தெரிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு , இதை போன்று ஜாக்ஸா ஹயபுஸா ( Hayabusa) என்ற விண்கலத்தை விண்ணில் அணுப்பி அந்த முயற்சி தொல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!