மைதானத்தில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டாரா..?


ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான குரூப் லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹாங் காங் போட்டியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா நேற்று இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசியபோது ஹர்திக் பாண்டியாவின் முதுகுப் பகுதியில் வலி (lower back injury) ஏற்பட அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் எழுந்து நடந்துள்ளார். அவரது காயம் குறித்து மெடிக்கல் குழு மதிப்பிட்டது. அப்போது முதுகுப் பகுதியின் அடிப்பகுயில் காயம் (lower back injury) ஏற்பட்டது உறுதியானது.

இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தீபக் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் துபாய் சென்றடைவார் என்றும், இந்த செய்தியை PTI-க்கு பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.