புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை வெளியிட்ட சியோமி நிறுவனம்..!!


இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் ரெட்மி Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சியோமி இந்தியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தேஷ் கா ஸ்மார்ட்போன் என்ற பெயரில் புதிய விளம்பர படங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சீனாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ரெட்மி 5A ஸ்மார்ட்போனை வெளியிட்டதை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகமான ரெட்மி 5A ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.


சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280X720 பிக்சல் எச்டி IPS டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– 500MHz அட்ரினோ 308 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி

பிளாட்டினம் சில்வர், ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் சீனாவில் 599 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,880 விலையில் வெளியிடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!