ராகு – கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க..!

ராகு – கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ராகு – கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்
அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
நவகிரக ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:

பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!