ஒபன் டென்னிஸ் போட்டியில் சிலிச் கால் இறுதிக்கு தகுதி..!! ‌ஷரபோவா அதிர்ச்சி தோல்வி..!!


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-6, (8-6), 6-2, 6-4 என்ற கணக்கில் 10-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழத்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.


ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-3, 2-6, 6-4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர்.

கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!