ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதையடுத்து விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.

இதே போல் விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

அமெரிக்காவில் முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காக 4 மாதத்தில் செல்ல உள்ளார். வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே இன்று காலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுக்கும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். – Maalaimalar