நடிகர் சிம்புவிற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!


நடிகர் சிம்பு புதிய படத்திற்கு முன்பணமாக பெற்றதை வட்டியுடன திருப்பி கொடுக்கவில்லை எனில் அவரது வீடு, மிக்ஸி, கிரைண்டனர், கட்டில், டிவி என அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் பல மாஸ் ஹூரோக்கள் மற்றும் ஹூரோயின்கள் நடிப்பில் உருவாகியிருக்கம் படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இவர் சுந்தர். சி இயக்கும் படத்திலும் ஹூரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜீன் மாதம் 17ம் தேதி பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து அரசன் என்ற புதிய படத்தை எடுக்க திட்டமிட்டது.

இதற்கென சிம்புவிற்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இப்படத்தின் படபிடிப்பு தொடங்கவில்லை. சிம்புவும் படத்திற்கு கால்ஷிட் கொடுக்கவில்லை.

அதனால் கொடுத்த ரூ50 லட்சமும், அதற்கு வட்டியாக 35.50 லட்சமும் சிம்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவரது கார், செல்போன் முதலியவற்றை ஜப்தி செய்ய வேண்டும் என்று பேசன் மூவி மேக்கர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது, வரும் 4 வாரங்களுக்குள் முன்பணமாக பெற்ற ரூ.50 லட்சத்தையும், அதற்கான வட்டித் தொகை 35.50 லட்சத்தையும் சேர்த்து மொத்தமாக 85.50 லட்சம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வீட்டில் உள்ள கார், செல்போன், டிவி, மெத்தை, சோபா, பேன், கிரைண்டர், மிக்ஸி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து சிம்பு தரப்பில் கூறுகையில், படத்தினை சரியான நேரத்தில் தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் தான் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதி இதை ஏற்க மறுத்துவிட்டார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!