23.11.2017 இன்றைய ராசிபலன்


மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

ரிஷபம்: மதியம் 12.24 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற் றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியா பாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12.24 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழையகடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்
களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: மதியம் 12.24 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மகரம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.24 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல் வாக்குக் கூடும். புது வேலை கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!