இந்திய அழகிக்கு பட்டம் கிடைக்க காரணமான அந்த ஒரே கேள்வி..? வெளி வந்த அதிர்ச்சி தகவல்..!!


2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சீனாவில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 அழகிகள் கலந்து கொண்டனர்..

இந்த அழகிப்போட்டியில் இந்தியாவில் உள்ள ஹரியானாவை சேர்ந்த (21) மனுசி சில்லர் என்ற பெண் கலந்துகொண்டார்.

இவர் அந்த போட்டியின் இறுதி சுற்று வரை சென்று போட்டியில் வெற்றிபெற்றார். இவர் தான் இந்த பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்திய பெண். இவருக்கு முன் பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தை வாங்கியுள்ளார்.

மேலும், மனுஷி சில்லர் ஏற்கனவே இந்தியாவில் நடந்த போட்டியில் இந்தியாவின் அழகியாக தேர்ந்தெடுக்கபட்டவர்.


இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் வாங்கினார் இவர்.

இவருக்கு தற்போது பல வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர் ஒரு மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இது போன்ற அழகி போட்டிகளில் இந்திய பெண்கள் பட்டம் சூடிய பிறகு தான், பன்னாட்டு அழகு சாதன பொருட்களின் விளம்பரம் இந்தியாவில் அதிகரிக்கும்.

முன்பு வரை மஞ்சள் பூசி பளபளப்பான முகதோற்றதில் இருந்த இந்த பெண்களிடம், வெள்ளை தான் அழகு என்பது, பேர் அண்ட் லவ்லி விளம்பரம் மூலமாக மாற்றப்பட்டது.


அதன் பிறகு அந்த பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் அழகு சாதன விற்பனைக்கு என்று நிரந்தர இடம் பிடித்து விட்டன.

இந்த நிலையில், இப்போது பல வருடங்களுக்கு பிறகு மக்களிடையே இயற்கை பொருட்களின் மீதான தாக்கம் வந்திருக்கிறது.

இதனால் அந்த நிறுவனங்களின் விற்பனையும் குறைந்து விட்டது. மீண்டும் ஒரு அழகியை இந்தியாவில் இருந்து தெரிவு செய்வதன் மூலம் இழந்த மார்க்கெட்டை விளம்பரங்கள் மூலம் மீண்டும் அடைந்து விடலாம் என்பதே அவர்களின் வியாபார தந்திரம்.

இதன் பின் உள்ள தந்திரத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டும்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!