விருச்சிக ராசியில் பிறந்த குழந்தைகள் எப்படிப்பட்டவங்க தெரியுமா….?


விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு தேள் போல இருந்தாலும் பழகினால் தேன் போல இனிப்பானவர்கள்.

விருச்சிகம் ராசி மண்டலத்தில் 8வது ராசியாகும். ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி. ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். விருச்சிக ராசிக்குள் விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களும் இடம்பெறுகின்றன.

இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர்.


ஒல்லியான தேகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஒல்லியான தேகம் கொண்டவர்கள். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும். எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தசைமூடியிருக்கும். சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான காணப்படுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். எதுவுமே தெரியாத அப்பாவிகள் போல பார்ப்பவர்களுக்கு தெரிவார்கள்

பாய்ந்தால் புலி
விருச்சிக ராசிக்காரர்கள் பார்க்க பூனை போல இருந்தாலும் புலி போல பாய்வார்கள். வீரமானவர்கள். கடின உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள். அதிக பேச்சுத்திறமை கொண்ட இவர்கள், பேச்சுத்திறமையினால் எதிரிகளை வெல்வார்கள். காரணம் இரண்டாம் இடம் குருதேவனின் வீடான தனுசு. பேச்சில் தேளின் சுபாவம் காணப்படும். பழகினால் தேன் போல இனிப்பானவர்கள்.


எதிரிகளை வெல்பவர்கள்
கலைகளையும், இசையையும் ரசிப்பவர்கள். எந்த திட்டம் என்றாலும் ரகசியமாக தன்னகத்தை வைத்துக்கொள்வார்கள். எதிரிகளை எளிதில் வெல்வார்கள். தன்னம்பிக்கையானவர்கள். மிகவும், தாராள மனப்பான்மையும், மகிழ்ச்சியும் கொண்டவர்கள். தனக்குப் போகத்தான் தான தர்மம் செய்வார்கள்.

ருசிக்கு அடிமை
சத்தான சுவையான உணவுகளையே உண்பார். உணவுக்காக அதிக கவனம் செலுத்துவார். ஆரோக்கியமான உணவுகளையே தேடி சுவைப்பார்கள். உணவுக்கு கவனம் செலுத்துவது போல உடை விசயத்திலும் கவனம் செலுத்துவார். சுக்கிரன் 12ஆம் இடத்திற்கு அதிபதி என்பதால் சுகவாசி. சிகப்பு, மஞ்சள் நிறம் அதிர்ஷ்ட நிறம். கறுப்பு, நீலம் ஆகாத நிறம்.

தைரியசாலிகள்
விருச்சிகத்தை செவ்வாய் ஆள்கிறார். மேஷத்தில் ராஜதந்திரியாக இருக்கும் செவ்வாய், விருச்சிகத்தில் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கிறார். அதனால் ஊழல், அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மதிப்பவர்களை மதிக்கும் நீங்கள், மிதிப்பவர்களை மிதிக்கத் தவற மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். நிதானமும், பொறுமையும் அவசியம்.


பணப்புழக்கம் அதிகம்
தனஸ்தானாதிபதி குரு என்பதால் இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. யாருடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் வயதான காலத்தில் பணவசதியோடு இருப்பார்கள்.

குரு அருளால் கல்வி
வாக்குஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானதிபதியும் குருவாக இருப்பதால் கல்வியோடு பூர்வீக ஞானமும் அதிகம் இருக்கும். சிலருக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள்.


செவ்வாயினால் பாதிப்பு
இந்த ராசிக்கு 6ஆம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1ஆம் வீட்டுக்கும் 6ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும். ஆனால் எளிதில் நோய் மறைந்து விடும். தீயினால் புண்கள், தழும்புகள் ஏற்படும். உஷ்ணத்தினால் வயிறு கோளாறுகள் ஏற்படும். விருச்சிகராசி காலச்சக்கரத்தில் 8வது ராசியாக இருப்பதால் நீண்ட ஆயுளுடையவர்.

வணங்க வேண்டிய தெய்வம்
விருச்சிக ராசியினர் இயற்கையாகவே பக்தி கொண்டவர். வேலை ஸ்தானத்தை பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக வரும் சிம்ம சூரியனே தீர்மானிக்கிறார். திருநெல்வேலியில் அருள்பாலிக்கும் நெல்லையப்பரையும் காந்திமதியம்மனையும் ஞாயிற்றுக் கிழமையில் சென்று, வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல வேலையும், உத்யோகத்தில் ஸ்திரத் தன்மையும் பதவி உயர்வும் கிடைக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!