இன்று 27 வது பிறந்தநாளை கொண்டாடும் குட்டி குஷ்பூ..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி, இன்று தனது 27 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி.

2001 கால கட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஷக்கலக்க பூம் பூம்’ மாயாஜாலத் தொடரில் சிறுமியாக நடித்திருந்தார்.

2003 ஆம் ஆண்டு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஹவா, கோயி மில்கயா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ போன்ற ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் வரிசையாக நடித்து வந்த இவர், தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்த எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யனும் குமாரு என்று ஹிட்டடித்து ரசிகர்களின் கனவு நாயகியாக ஜொலித்து வருகிறார். 27 வயதாகும் இவருக்கு இப்போதே சினிமா துறையில் 19 வருட அனுபவம் உள்ளது.

இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 50 வது படத்தலைப்பின் வெளியீட்டை, திமுக தலைவர் கருணாநிதியின் இழப்பையடுத்து படக்குழு தள்ளி வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின்போதும் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நல்லுள்ளம் படைத்த ஹன்சிகாவுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்ளூ பேபி.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!