திமுக தலைவர் கலைஞரின் இறப்பு சான்றிதழ் வெளியானது…!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின், இறப்புச் சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து, அவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.


நேற்று மாலை சூரியன் மறைந்தபின் கருணாநிதியின் உடல் மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநகர சுகாதார அதிகாரி மருத்துவர் என்.ஏ.செந்தில்நாதன் கையெழுத்திட்ட கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் அவரின் பெயர், வயது, தாய், தந்தை மற்றும் மனைவியின் பெயர், இறந்த நாள், இறந்த இடம், வீட்டுமுகவரி ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!