தமிழக முதல்வராக சாதனைப் படைத்த கருணாநிதி…. எத்தனை நாட்கள் தெரியுமா..?


தமிழக முதல்வராக அதிக நாட்கள் பணியாற்றிய ஒரே தலைவர் என்ற பெருமையை திமுக தலைவராக இருந்த கருணாநிதி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வராக 6863 நாட்கள் பணியாற்றி சாதனைப் படைத்த கருணாநிதி

தமிழ்நாட்டில் 5 தடவை முதல்-அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239 நாட்கள் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

எம்.ஜி.ஆர். 3634 நாட்களும், காமராஜர் 3432 நாட்களும் முதல்வராக இருந்துள்ளனர். காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பொறுப்பில் இருந்ததை விட கூடுதலாக ஒரு மடங்கு அதிகமான நாளில் கருணாநிதி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!