பெண்கள் உலக கோப்பை ஆக்கி தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது நெதர்லாந்து..!!


14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை பந்தாடி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

நெதர்லாந்து அணி, உலக கோப்பையை உச்சிமுகர்வது இது 8-வது முறையாகும். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!