பஞ்சாபில் ரெயிலின் முன் செல்பி – 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்..!


பஞ்சாபில் ரெயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தும் பலர் திருந்திய பாடில்லை.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் – லூதியானா கத்னா சாஹிப் ரெயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்கள், அந்த வழியாக வந்த ரயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!