விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு ‘கூகுள் கோ’ வின் புதிய அப்டேட்..!


விலைக்குறைந்த ஸ்மார்ட் போன்களில் அதிக வேக செயல்பாடுகள் கொண்ட இயங்குதளம் இருந்தால் போன் திணறக் கூடும். காரணம் அந்த போன்களில் ரேம்-ன்(RAM), ஸ்டோரேஜ் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதன் காரணமாக கூகுள், யூடியூப், கூகுள் சர்ச், போன்ற அத்தியாவசிய செயலிகள் பயன்படுத்தும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதே பெரும்பாடாக இருக்கும்.

எனவே இதனை தடுக்க 1 ஜிபி ரேம் கொண்ட கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக ஆண்ட்ராய்டு கோ என்ற இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த இயங்குதளத்தில் செயல்படும் வகைகளில் கூகுள் சர்ச் இஞ்சினை கூகுள் கோ என்றும், யூடியூப் க்கு யூடியூப் கோ, கூகுள் மேப்பை கூகுள் மேப் கோ என்றும் வடிவமைத்தது. இது அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இது குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த அப்ளிகேஷன்களில் கூகுள் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.

கூகுள் கோ

குறைவான ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான இந்த அப்ளிகேஷன் மூலம் வழக்கமான அனைத்து தேடல்களையும் செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் அம்சமாக ஒரு செய்தி இணைய பக்கத்தை திறந்தால் 28 மொழிகளில் அதுவே வாசிக்கும். இந்த அப்டேட் வரும் வாரங்களில் கிடைக்கும்.


கூகுள் மேப் கோ

இந்த கூகுள் மேப் கோ அப்டேட்டில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களை பதிவு செய்தால் உங்களுக்கு 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் அதன் குரல் மூலம் உங்களை வழிநடத்தி செல்லும். இதற்கு குறைவான ரேம் பயன்பாடே போதுமானது. மேலும், நீங்கள் செல்லவேண்டிய துல்லியமான சாலையை காண்பதற்கான வேலைகளில் தற்போது கூகுள் நிறுவனம் இறங்கியிருக்கிறது.

யூடியூப் கோ

வழக்கமான கூகுள் நிறுவனத்தின் மற்றொரு அப்ளிகேஷனான யூடியூப்பில் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் காண்பது போன்ற துல்லியத்துடன் வீடியோக்களை இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி காணலாம். மேலும் குறைவான டேட்டா அளவே தேவைப்படும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!