ஜெயலலிதாவிற்கு பிறகு கருணாநிதிக்கு மருத்துவம் பார்க்கும் பிரபல மருத்துவர்..!


காவிரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவில் ஒருவரான எச்.வி.ஹண்டேயை கருணாநிதி தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்.

வயது முதிர்ச்சி காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, உடல் நலிவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் கருணாநிதிக்கு எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பிரபல மருத்தவரான எச்.வி.ஹண்டேயும் ஒருவர்.

இவர் 1980-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நின்றார். அப்போது இவருக்கு எதிராக நின்று வெற்றிபெற்றவர் கருணாநிதி. அதேபோல் ஹண்டே எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

மேலும் எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னை போது அவருடன் இருந்து கவனித்து கொண்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது இவர் தான் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!