தென்னிந்தியாவிலிருந்து பலாலிக்கு குறைந்த கட்டண விமான சேவை..!!


தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

”வெளிநாட்டுப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்குப் பயணங்களை மேற்கொள்வதில், பல்வேறு பயணப் பிரச்சினைகள் உள்ளன. இதனால் தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மிக விரைவில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும்.

அத்துடன் தற்போது சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு விமான நிலையம் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

அதுபோல, விரைவில் ஹிங்குராக்கொட விமான நிலையமும் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் ” என்றும் அவர் கூறியுள்ளார்.source-puthinappalakai

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!