75 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத மர்மத் தீவு பற்றி தெரியுமா..?


கடந்த 75 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் க்ரூய்நார்ட் என்னும் தீவில் இயற்கை சீற்றம் மற்றும் தீயசக்திகள் காரணமாக மக்கள் காலடி எடுத்து வைக்கவே அஞ்சுகின்றார்கள்.

க்ரூய்நார்ட் தீவு ஓவல் வடிவத்தில் இருக்கும் தீவாகும். இது வடக்கு ஸ்கொட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது.

இரண்டாம் உலக போரின் போது இந்த இடம் பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள், இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்து வந்த இடமாகவும், ஆந்த்ராக்ஸ்-ஐ ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தீவின் இடத்தில் ஆடுகளை கொண்டுவந்து பல பரிசோதனைகள் செய்தார்கள். இதனால் இந்த தீவு இரசாயனம் நிறைந்த ஒரு பாதுகாப்பற்ற மற்றும் வாழ்வதற்கு தகுதியற்ற தீவாக மாறியது.


இதனால் இந்த தீவில் மக்கள் வாழ முடியாது என்று கூறி கைவிடப்பட்ட தீவாக அறிவித்தனர். பின் 1945-ல் உலக போர் முடிவடைந்ததும் இதன் உரிமையாளர் இந்த தீவை மீண்டும் வாங்க முயற்சித்தார்.

ஆனால், அரசு அதை நிராகரித்து உத்தரவிட்டது. அதன் பின் நீண்ட நாள் கழித்து பல ஆய்வுகள் மற்றும் சுத்தப்படுத்தல் முயற்சிக்கு பிறகு 1990-ல் க்ரூய்நார்ட் தீவு மக்கள் வாழ தகுதியான இடம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், டாக்டர் பிரைன் என்பவர் க்ரூய்நார்ட் தீவில் முழுவதுமாக ஆந்த்ராக்ஸ் நீக்கப்படவில்லை. எனவே அங்கு வாழ்வது அபாயமானது என கருத்து தெரிவித்தார்.


மேலும் அந்த தீவில் பரிசோதனைகள் முடிந்து ஏறத்தாழ 75 ஆண்டுகள் கடந்தும் க்ரூய்நார்ட் தீவு ஒரு அச்சுறுத்தும் இடமாகவே திகழ்ந்து வருவதால், மக்கள் அந்த தீவில் அடியெடுத்து வைப்பதற்கே அஞ்சுகின்றார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!