பிரபல இந்தி நடிகைக்குள் இப்படியொரு ரகசியம் புதைந்திருக்கிறதா?


இந்தி திரை உலகில் நடிகை சோனம் கபூர் அடியெடுத்துவைத்து பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் அவர் கவர்ச்சி சற்றும் குறைந்த பாடில்லை. முன்பு அவர் 80 கிலோ எடையுடன் காணப்பட்டார். இப்போது ‘சைஸ் ஜீரோ’ எனப்படும் கட்டுடலுடன் காட்சித் தருகிறார்.

அதற்கு காரணம் அவரது உணவுக் கட்டுப்பாடு. எப்போதும் எதையாவது சாப்பிடுவது என்ற நிலையில் இருந்து, ‘இப்போது இதை மட்டுந்தான் சாப்பிடுவேன்’ என்ற கொள்கைக்கு அவர் மாறிய பின்பு எடை எளிதாக குறைந்துவிட்டது.


ஆனால் அதிக அளவில் எடை குறையும்போது, அது சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும். அப்படி எதுவும் சருமத்தில் தோன்றாத அளவுக்கு தனது உடல் அழகை காப்பாற்றி மேம்படுத்தி யிருக்கிறார், சோனம் கபூர். இப்போது அவர் சாலட் மட்டுமே சாப்பிடுகிறார்.

தினமும் 11 கப் தண்ணீர் பருகிவிடுகிறார். சோனம் கபூரின் அழகியல் ஆலோசகர் அம்பிகா பிள்ளை. பிரபல பியூட்டிசியனான இவர், “சோனத்திற்கு முதன் முதலில் நான்தான் மேக்கப் செய்தேன். அவர் ரொம்ப அன்பானவர். அழகானவர்.


பொதுவாகப் பார்த்தால் அவருக்கு புடவை, சுடிதார் போன்றவை பொருந்தாது. அவருக்கு மாடர்ன் வெஸ்டர்ன் உடைகள்தான் அதிக அழகுதரும். அவருடைய கூந்தலை பார்த்தவர்கள் தங்கள் இதயத்தை பறி கொடுத்துவிடுவார்கள். அது அத்தனை அழகு.

ஆனால் சோனத்திடம், ‘உங்கள் உடலில் அதிக அழகான உறுப்பு எது?’ என்று கேட்டால், கண்களை சொல்வார். சிவப்பான அவருக்கு கறுப்பான கண்கள் ரொம்ப பிடிக்கும். மரபுரீதியான மேக்கப்பிற்கு பதில் மேற்கத்திய மேக்கப்பை அதிகம் விரும்புவார்.


அவரது கண்களுக்கு ‘கிராபிக் லைன் மேக்கப்’ நன்றாக பொருந்தியது. பிங்க், ஆரஞ்சு லிப்ஸ்டிக் போன்று லைட் ஷேடு கொண்ட குளோசி நிறங்களும் அவருக்கு எடுபடும். கிராபிக் லைன் என்பது ஒருவித மேஜிக் மேக்கப்.

அதன் மூலம் கண்களின் அளவை கூட்டவும் முடியும். குறைக்கவும் முடியும். மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெறும்போதும், போட்டோ ஷூட்களில் பங்குபெறும்போதும் கண்களுக்கு கிராபிக் லைன் பயன்படுத்தினால், அழகு அதிகமாகும்.


கறுப்பு மற்றும் நீல நிறங்களில் கிராபிக் லைன் கொடுக்கலாம். கண்களில் வழக்கம்போல் சாதாரண முறையில் வரைய ஆரம்பித்து இறுதிப் பகுதியில் சதுர வடிவில் வரைந்து முடிப்பது கிராபிக் லைன் மேக்கப் ஆகும்.

இதை வரையும் முறையில் சிறிய கண்களை பெரிதாக காட்ட முடியும். பெரிய கண்களை சிறிதாக தோன்றவும் செய்யலாம். சோனம் கபூரின் கண்களை கூர்ந்து கவனிக்கும்போது அதன் உள்ளே அழகின் ரகசியம் புதைந்து கிடப்பதை உணரலாம்” என் கிறார், அம்பிகா பிள்ளை. உற்றுப்பாருங்கள் உண்மை தெரியும்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!