4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடு சென்ற பிரதமர் மோடி… கின்னசுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்..!


மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உள்ளது என சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்தது.

இந்நிலையில், மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக கோவா காங்கிரஸ் செய்தி தொட்ர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். எனவே அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!