இனி ஸ்மார்ட்போன் கை தவறி கீழே விழுந்தாலும் கவலைப்படாதீங்க – வீடியோ..!


ஜெர்மன் நாட்டு பொறியியல் மாணவர் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களில் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் கேஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஸ்மார்ட்போன்களை வாங்க ஒவ்வொருவத்தரும் பல ஆயிரங்களை செலவிடுகின்றனர். அவை கை தவறி கீழே விழுந்தால் அதன் ஸ்கிரீன் போன்றே அவர்களும் நொருங்கி விடுகின்றனர். ஸ்மார்ட்போனில் தலைசிறந்த கேஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் போடப்பட்டு இருந்தால், போன் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும்.

இவ்வாறு உங்களின் ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் பணியை மொபைல் ஏர்பேக் முழுமையாக ஏற்று கொண்டு இருக்கிறது. பிலிப் ஃப்ரென்ஸெல் என்ற ஜெர்மன் நாட்டு பொறியியல் மாணவர் பிரத்யேக ஸ்மார்ட்போன் கேஸ் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த கேஸ் போடப்பட்டு இருந்தால், ஸ்மார்ட்போன் கீழே விழுந்தாலும் பாதிக்கப்படாது.

ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு கேஸ்-இல் பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங்-கள் எட்டுக்கால் பூச்சியின் கால்களை போன்று ஸ்மார்ட்போனின் அனைத்து மூலைகளிலும் விரிந்து கொள்ளும். இதனால் ஸ்மார்ட்போன் தரையில் விழும் முன் கேஸ்-இல் இருக்கும் எட்டு ஸ்ப்ரிங்-கள் போன் நேரடியாக கீழே விழுவதை தவிர்க்கிறது.


இவரது கண்டுபிடிப்புக்கு ஜெர்மன் மெக்கடிரானிக்ஸ் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தனது ஐபோன் கீழே விழுந்து ஸ்கிரீன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இந்த கேஸ்-ஐ உருவாக்க துவங்கினார். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், போன் கீழே விழுவதை தானாக கண்டறியும் சென்சார்களை ஸ்மார்ட்போன் கேஸ்-இல் பொருத்தினார். போன் கீழே விழுவதை செனசார்கள் அறிந்து கொண்டதும், மெட்டல் ஸ்ப்ரிங்-கள் தானாக விரிந்து கொண்டு போன் பாதிப்படைவதை தவிர்க்கிறது.

ஆக்டிவ் டேம்பிங் என்ற பெயரில் ஆட்கேஸ் (ADcase) என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாதுகாப்பு கேஸ்-ஐ ஃப்ரென்ஸெல் காப்புரிமை பெற்றிருக்கிறார். விரைவில் கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த சாதனம் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படாத நிலையில், இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

முதற்கட்டமாக இந்த ஆட்கேஸ் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!