சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ்… இணையத்தில் தகவல்கள்…!


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வழக்கமாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி மாத வாக்கில் நடைபெறும். அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மாப்ட்போன்களும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகின.

சாம்சங் வழக்கப்படி இந்த ஆண்டும் தொடரும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 2018 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்மொபைல் வெளியிட்ட தகவல்களிலும் இதே தகவல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி, மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. முந்தைய கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, மற்றும் கேலக்ஸி S8 மாடலை விட மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் இரண்டு மாடல்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் பேஸ் மாடலில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், டாப் எண்ட் மாடலில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி கேலக்ஸி S9 சீரிஸ் லிமிட்டெட் எடிஷன் கொண்ட மாடல் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை புதிய S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.