ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்…!


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து – ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வென்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நள்ளிரவு 12 மணிக்கு பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 54-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இறுதியில், ஸ்பெயின் அணி ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!