ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு..!!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே நேற்று வொசிங்டனில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளைக் கண்டுகொள்ளாமல் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நிக்கி ஹாலே, பேரவையை அரசியல் சார்புடைய சாக்கடை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாசாங்குத் தனத்துடன் இந்த தன்னாட்சி அமைப்பு செயற்படுவதாகவும், .இது மனித உரிமைகளை கேவலப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளால் அதிருப்தியடைந்தே, பேரவையை விட்டு அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதனை இஸ்ரேல் பாராட்டியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து ஐ.நா பொதுச்செயலரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.source-puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!