எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது ரஷியா..!


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரஷியா மற்றும் எகிப்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் எந்த அணியும் முன்னிலை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ரஷியாவின் அகமது பதே 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து டெனிஸ் செரிதேவ் 59-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து, ரஷியாவின் அர்டெம் சுபையா 62 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரஷியா அணி 3-0 என முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து வீரர் மொமது சலா ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை

இறுதியில், ரஷியா அணி எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி