2019ஆம் ஆண்டில் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது..!

ஆண்டிராய்டு 2.1 மற்றும் 2.2 ஆகியவற்றில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், நடப்பாண்டுக்குப் பிறகு வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் காலத்தில் வாட்ஸ் ஆப்பில் சில அம்சங்களை மேம்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. அவ்வாறு மேம்படுத்தும்போது, பழைய ஆண்டிராய்டு வெர்சன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இயங்குவதில் சிரமம் ஏற்படும் என்றும், இதனால், வரும் 2019ஆம் ஆண்டு முதல் அந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி, ஐபோன் 3ஜி.எஸ்., iOS 6ல் இயங்கும் ஐபோன்கள், நோக்கியா எஸ்40, நோக்கியா asha சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் இது பொருந்தும் என கூறியுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், அத்தகைய ஸ்மார்ட்போன்களின் இயங்குதளத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!