டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க இந்திய இளைஞர் இவ்வளவு தொகையை செலவிட்டாரா..?


சிங்கப்பூரின் சென்டோசா தீவில் ஷாங்ரி லா ஓட்டலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

இந்த ஓட்டலுக்கு தங்க வரும் டிரம்பை சந்திப்பதற்காக மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான மகராஜ் மோகன் (வயது 25) ரூ.38 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

டிரம்பை சந்திக்க ஒரு சதவீத வாய்ப்பு உள்ளது என தனக்கு தெரியும் என கூறியுள்ள மோகன் டிரம்புடன் ஒரு செல்பி எடுத்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால், அதிபர் டிரம்ப் பயணம் செய்த லிமோசின் கார் செல்லும் வழியில் நின்று மோகன் செல்பி ஒன்று எடுத்துள்ளார்.

அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக ஓட்டலின் வரவேற்பு அறையில் இன்று காலை 6.30 மணியில் இருந்து காத்திருந்துள்ளார். நேற்று 5 மணிநேரம் ஓட்டல் வரவேற்பு அறையில் காத்து கிடந்துள்ளார்.

இறுதியில் இன்று காலை 8 மணியளவில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திப்பதற்காக ஓட்டலை விட்டு கிளம்பும் முன்னர் அதிபர் டிரம்பின் பார்வை மட்டும் இவர் மீது பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பிற்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத ஒழிப்பினை முற்றிலும் செயல்படுத்த இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு பதிலாக வடகொரிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்துள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!