யாழில் பட்டுப் புடவை வாங்கித் தராததால் மாணவி செய்த விபரீத செயல்..!


ஆலயத் தேர்த் திரு­வி­ழாவுக்குச் புடவை வாங்­கித் தரா­த­தால் மன­மு­டைந்த 18 வயது பாட­சாலை மாணவி தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்த்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம் எரு­வ­னில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

யாழ். வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (09.06.2018) இடம்பெற்றது. இந்நிலையில் தனது பாடசாலைத் தோழிகள் புடவைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் நானும் புடவையணிந்தே ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென தாயாரை வற்புறுத்தியுள்ளார்.

இவ­ருக்கு புது உடை வாங்­கிக் கொடுத்­தால் ஏனைய இரு பிள்­ளை­க­ளுக்­கும் புது உடை­கள் வாங்க வேண்­டு­மென்­ப­தால் தனது கஷ்கரமான சூழ்நிலை காரணமாக உடை­கள் வாங்­கிக் கொடுக்­க­வில்லை. இதன்போது மாணவி திரு­வி­ழா­வுக்குச் செல்­ல­வில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டிலுள்ள அனைவரும் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்துக்குச் சென்ற நிலையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆல­யத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிய குடும்­பத்­தி­னர் மாணவி தவ­றான முடி­வெ­டுத்­துள்­ளமை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.
இதே­வேளை, உயி­ரி­ழந்த மாண­வி­யின் குடும்­பத் தலை­வ­ரான தந்தை, தனி­யாக வாழ்ந்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!