நயன்தாராவின் பாடலால் சர்ச்சையில் சிக்கிய அனிருத் – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


கோலமாவு கோகிலா திரைப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ”எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சு” பாடல் வைரலாகி இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் அனிரூத் ரவிச்சந்திரன்.

தற்போது இந்த கல்யாண வயசு பாடல் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த பாடல் ஃபீலிங் மீ எனும் ஆங்கிலப்பாடலை தழுவி இருப்பதாக இணையத்தில் வரும் தகவலே அந்த சர்ச்சைக்கு காரணம்.

இதை அறிந்த ரசிகர்கள் அனிரூதா இப்படி செய்தார்? என அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஏற்கனவே தலைவா படத்தின் தீம் மியூசிக் பற்றி கூட இது போல ஒரு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!