ஃபேஸ்புக் பயனர்களுக்கு ஸ்டோரீஸ் அப்டேட் வழங்கும் புதிய வசதிகள்..!!


ஃபேஸ்புக் தளத்தில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பின்னர் பார்க்க சேமித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் ஏற்கனவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

ஃபேஸ்புக் கேமரா கொண்டு படமாக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்க முடியும். இவற்றை குறிப்பிட்ட வாடிக்கையாளர் மட்டும் பார்க்க முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சேமிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இவற்றை சேமித்து வைத்து பின்னர் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஃபேஸ்புக் கேமரா


ஃபேஸ்புக் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை மட்டுமே தளத்தில் சேமிக்க முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. என ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சத்திற்கான தலைவர் கானர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.

வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும். இத்துடன் புகைப்படங்களையும் சேர்க்க முடியும். “வாய்ஸ் போஸ்ட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பும் வழிகளை பயன்படுத்த முடியும்.” என்றும் ஹேஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த அம்சம் குறைந்த டேட்டா அல்லது நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் வாய்ஸ் போஸ்ட் செய்யும் கால அளவு 20 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் வாய்ஸ் போஸ்ட்


இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக் லைட் பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தாலும் விரைவில் ஆன்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்டோரீ அம்சம் போன்றே இந்த போஸ்ட்களும் 24 மணி நேரத்திற்கு பின் மறைந்து விடும்.

ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் வாடிக்கையாளர்களை தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஸ்டோரீக்களை ஆர்ச்சிவ் செய்வதற்கான அனுமதி கோரப்படும், இங்கு உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆர்ச்சிவ் செய்ய வேண்டாமெனில் மறுக்க கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.

இதனை எப்போது வேண்டுமானலும் பார்க்கவும், அவற்றை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக மீண்டும் ஷேர் செய்யும் வசதிகள் வழங்கப்படுகிறது. ஸ்டோரீஸ் அம்சத்தில் வாய்ஸ் போஸ்ட் பதிவு செய்தால் குறிப்பிட்ட ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும், எனினும் ஆர்ச்சிவ் அம்சத்தை செயல்படுத்தி இருந்தால், அவற்றை ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் பகுதியில் பார்க்க முடியும்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!