ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலின் முன்ணனியில் சீனா…!


இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இடம்பிடித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2017 மூன்றாம் காலாண்டில் மட்டும் 3.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 40 சதவிகிதம் வளர்ச்சி ஆகும், இதோபோல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவிகித வளர்ச்சி என சர்வதேச டேட்டா கார்பரேஷன் (IDC) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மட்டும் 10 சதவிகிதம் ஆகும். ஒரு காலாண்டில் இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

சியோமி நிறுவனம் இந்த காலாண்டில் மட்டும் 92 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு இணையாக சியோமி நிறுவனமும் 23.5 சதவிகித பங்குகளை பெற்றுள்ளதாக IDC தெரிவித்துள்ளது.


சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் விற்பனை 37 சதவிகிதமாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ஐந்து சதவிகிதம் அதிகம் ஆகும். Mi ஸ்டோர் மற்றும் இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களின் மூலம் ஆஃப்லைன் விற்பனையையும் சியோமி அதிகரித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ2, கேலக்ஸி ஜெ7 Nxt, ஜெ7 மேக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்தது. சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மும்மடங்கும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகமாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது. 2017 மூன்றாம் காலாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனகள் விற்பனையாகியுள்ளது. லெனோவோ நிறுவனம் 9 சதவிகித பங்குகளுடன் சந்தையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

இது முந்தைய காலாண்டை விட 83 சதவிகிதம் அதிகம் ஆகும். விவோ நிறுவனம் 8.5 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் 7.9 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விற்பனை 40 சதவிகிதமும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக IDC தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!