பல்கலைக்கழகத்திலிருந்து ஓட்டம் பிடித்த மாணவர்கள் – பீதியை கிளப்பிய பழம்..!


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கியாஸ் கசிவு காரணமாக அந்த துர்நாற்றம் பரவி இருக்கலாம் என ஊழியர்களும், அதிகாரிகளும் அஞ்சினர். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கியாஸ் கசிவினால் ஆபத்து ஏற்படும் என அஞ்சி பல்கலைக்கழகத்தில் இருந்து 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினர் துர்நாற்றத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்கலைக்கழகத்தில் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவன நூலகத்தில் ஒரு மறைவிடத்தில் அழுகிய நிலையில் துரியன் பழங்கள் இருந்தன.

அதில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்தான் கியாஸ் கசிவு போன்று வாசனையை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியது தெரிய வந்தது. எனவே, அழுகிய பழங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. துரியன் பழம் மருத்துவகுணம் கொண்டது. குழந்தை இல்லாத தம்பதிகள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். மிகவும் இனிப்பு சுவை கொண்ட இப்பழம் அழுகிவிட்டால் மிக மோசமான துர்நாற்றம் அடிக்கும் தன்மை கொண்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!