இரட்டை இலை சின்னம் விரைவில் காணாமல் போய் விடும்…!! முதலமைச்சர் பழனிசாமி அதிரடி..!!


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- டி.டி.வி. தினகரன் அணி ஆரம்பிக்கும்போது ஜெயலலிதா பெயரை பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தீர்கள். தற்போது திவாகரனும் அம்மா அணி என்று தொடங்கியுள்ளாரே? அவர் மீதும் வழக்கு போடுவீர்களா?

பதில்:- இப்போது திவாகரன் அணி அம்மா பெயரை சொல்ல தொடங்கி இருக்கிறது. இரண்டுமே நிற்காது. விரைவில் காணாமல் போய் விடும்.

தினகரன் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாள் ஆனது. அதற்குள்ளேயே விரிசல், பிளவு வந்து விட்டது. திவாகரன் கட்சி நடைமுறைக்கு வருமா? என பார்க்கலாம்.

2 பேரும் இரட்டை இலை வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரு கட்சிகளும் காணாமல் போய் விடும்.

கேள்வி:- திவாகரன், தினகரனை எதிர்க்கும் அதே வேளையில் உங்கள் அணி சார்பான ஆதரவு வெளிப்பாட்டையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறாரே?

பதில்:- இரண்டுமே நிற்காது. இவர்கள் வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தார்கள். மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை. 2 கட்சிகளுமே விரைவில் காணாமல்போகும்.

கேள்வி:- எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லையே?


பதில்:- அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- அவரை கைது செய்ய ஒரு வாரம் ஆகுமா? பேஸ்புக்கில் கூட செயல்பாட்டில் உள்ளாரே?

பதில்:- இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னை வந்தது. அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தது, மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய விவரங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

அவர்கள் தரப்பில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று என்னால் எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி:- கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காததற்கு தலைமை தான் காரணம் என்று கர்நாடக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளார்களே?

பதில்:- அது தவறான தகவல். அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை.

அங்கு ஒவ்வொரு கட்டத்திலும் மாறி, மாறி வந்து இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அ.தி.மு.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.

கேள்வி:- சமூக வலைதளங்களில் காவல் துறையில் விபத்தில் பலியானவர்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.3 லட்சம் கிடைக்காது என்று பரவி வருகிறதே?

பதில்:- அது தவறான கருத்து. காவல் துறையினருக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து வழங்கப்படும்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!