சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற 5 பேர் – சாக்லேட் வாங்கிக் கொடுத்து கற்பழித்த கொடூரம்..!


விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், பட்டாபிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அந்த சிறுமியின் அக்கா அவரை பல இடங்களில் தேடி உள்ளார். அப்போது, அதே பகுதியில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகே சென்று பார்த்தபோது சுமார் 15 வயதுள்ள 5 சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு இருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.

சிறுமியின் அக்கா கூச்சலிட்டதால், பயந்து போன அந்த 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற சிறுமியின் அக்கா தனது தாயிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார்.சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் தான் விளையாடி கொண்டிருந்தபோது பணம், சாக்லெட் தருவதாகவும் கூறி அழைத்து சென்றதாக சென்றார்கள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குண்டூர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். அவரது உத்தரவின்பேரில் குண்டூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறுவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை 5 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!