வாட்ஸ்ஆப் வெளியிட்ட புதிய விதிமுறைகள் – முதல்ல பயப்படாம இத படிங்க..!


புதிய விதிமுறைகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் பயனர்களுக்கு இணங்க வாட்ஸ்ஆப் அதன் தேவைகளை மாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்டசம் 16வயதாவது இருக்கவேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் வாட்ஸ்ஆப் புதிய சேவை விதிமுறைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஐரோப்பிய பயனர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயதுள்ளவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என அந்நாட்டின் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.


வாட்ஸ்ஆப்:
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் சேவை நமது தினசரி வேலைகளை எளிமையாக்கு முறையில் அமைந்துள்ளது. தொழில், கல்வி, பயனம் சார்ந்த அனைத்திற்கும் உதவும் வகையில் உள்ளது வாட்ஸ்ஆப்.

மே மாதம்:
வரும் மே மாதம் 25-ம் தேதி நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR), மக்கள் தங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அதிகமான கட்டுப்பாட்டைக் கொடுக்கும் வாட்ஸ்ஆப். ஆனால் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


சிறுவர்கள்:
இப்போது வாட்ஸ்ஆப் சேவையை சிறுவர்கள் அதிகளவில் பயன்படுத்தவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தினசரி 5மணி நேரம் வரை சிறுவர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர், இதனால் அவர்களது கல்வி, விளையாட்டு போன்ற அனைத்தும் கேள்விக்குறியாகிறது. எனவே இந்த புதிய விதிமுறை அனைத்து இடங்களுக்கும் வந்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

பேஸ்புக்:
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது வாட்ஸ்ஆப் எனவே, பேஸ்புக் சேவையிலும் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் தற்சமயம் பேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அதிகளவு மக்கள் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக நமது தினசரி வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது இந்த வாட்ஸ்ஆப் செயலி. மேலும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த செயலி. வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் சேர்க்கும் வண்ணம் உள்ளது. விரைவில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

89சதவீதம்:
இந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணனியில் பயன்படுத்துவதாகும் அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தியதால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.-Source: gizbot

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!