இந்திய பிரீபெயிட் பயனர்களுக்கு ஏர்டெல் அறிவித்த புதிய சலுகை..!


ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை சமீபத்தில் பிஎஸ்என்எல் அறிவித்த ஐபிஎல் சார்ந்த சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் சலுகை நேரடியாக ஐபிஎல் சிறப்பு சலுகை என குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த சலுகையில் பயனர்களுக்கு அதிவேக டேட்டா வழங்குகிறது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் ரூ.499 சிறப்பு சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 164 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு ஜிபி டேட்டா ரூ.3க்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் அறிவித்திருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றிற்கு 300 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை மிஞ்சும் பயனர்களுக்கு வாய்ஸ் கால் கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் ரூ.448 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா சுமார் 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.509 சலுகையில் பயனர்களுக்கு 1.4 ஜிபி டேட்டா சுமார் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற சலுகைகள் ரூ.499 ரீசார்ஜ் செய்வோருக்கு வழங்குவதை போன்று வழங்கப்படுகிறது.


ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.251 ஐபிஎல் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐபிஎல் சலுகை என்பதால் பயனர்கள் இந்த டேட்டாவை ஐபிஎல் கிரிகெட் தொடர் நிறைவுறும் வரை எந்நேரத்திலும் பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ரூ.248 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 51 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 153 ஜிபி டேட்டா கிடைக்கும். எனினும் பயனர்கள் இந்த சலுகையை பெற ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்று பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா வழங்குவதில்லை. கேரளாவில் வசிக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே அதிவேக 4ஜி டேட்டா பயன்படுத்த முடியும். மற்ற பகுதிகளில் வசிக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் 3ஜி டேட்டா பயன்படுத்த வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்