இந்தியர் தலைமையில் உருவான நவீன ஹைபர் கேமரா – நொடிக்கு ஆயிரம் புகைப்படமா..?


விண்வெளியில் உள்ள கோள்களை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தொலைநோக்கி மையங்கள் உள்ளன. உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி ஸ்பெயினில் உள்ள லா பால்ம் தீவில் உள்ளது. இந்த தொலைநோக்கியில் உள்ள கேமரா ஒரு புகைப்படத்தை கிளிக் செய்ய சில நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.

இதற்கு மாற்றாக இந்திய வம்சாவளி பேராசிரியர் விக் தில்லோன் தலைமையில் ஷெப்பீல்ட் பல்கலைக்கழக குழு நவீன கேமராவை உருவாக்கியுள்ளது. ஒரு நொடிக்கு ஆயிரம் புகைப்படங்களுக்கும் மேலாக எடுக்கக்கூடிய இந்த ஹைபர் கேமரா இந்த வாரத்தில் தொலைநோக்கியில் பொறுத்தப்பட உள்ளது.

3.5 மில்லியன் யூரோ செலவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைபர் கேமரா நட்சத்திரங்கள் மற்றும் கருந்துகள்கள் பற்றிய ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரம், கோள்கள் என இலக்கை துல்லியமாக படம் பிடிக்கும் இந்த கேமரா கடல்மட்டத்தில் இருந்து 2,500 மீட்டர் உயரத்தில் உள்ள தொலைநோக்கியில் பொறுத்தப்பட உள்ளது.–Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!