சினிமா ரசிகர்களுக்கு கூகுளின் புதிய வசதி! என்ன தெரியுமா..?


சினிமா ரசிகர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்கள் குறித்து திட்டமிடுதலை எளிதாக்கும் விதமாக புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது.

நாம் இதுவரை, வெளியான திரைப்படங்கள், அருகில் உள்ள திரையரங்குள், திரையரங்குகளின் தன்மை, திரைப்டங்களின் விமர்சனம், மொழி, ஆகியவற்றை தனித்தனியாக கூகுளில் தேடி தெரிந்து கொண்டிருப்போம்.

இனி ஒரே கிளிக்கில் இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளது.

கூகுளில் ஷோ டைம் (show time) என சர்ச் செய்தால் இவை அனைத்தும் நமக்கு தெரியவரும்.


இதன் மூலம் நாம் பார்க்க விரும்பும் திரைப்படங்கள் குறித்து திட்டமிடுதல் இலகுவாகி, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் இனி வரவிறுக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் கூகுள் ஆப் அப்டேட்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள திரையரங்குகளில் என்ன படங்கள், எத்தனை மணிக்கு திரையிடப்படுகின்றன போன்ற விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!